Prophet mohammed nabi history in tamil


நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

அல்லாஹ் மனிதர்களுக்கு செய்த அருட்கொடைகளில் எல்லாம் மிக பெரும் அருட்கொடை எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களை எங்களுக்கு தந்ததாகும். அந்த அருட்கொடையை நாம் பெறவில்லையென்றால் எங்களை படைத்த ரப்பை (இறைவனை) நாம் அறிந்திருக்க மாட்டோம். எங்களுக்கு இறைவனை காட்டி தந்தது முஹம்மத் ﷺ என்னும் மாபெரும் அருட்கொடையே.

இந்த முஸ்லிம் உம்மத்திற்காக  கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் பட்ட கஷ்டங்களும் சிரமங்களும் சொல்லி முடிக்க முடியாது. எதிரிகள் கல்லால் அடித்தனர், சிலர் சொல்லால் காயப்படுத்தினர், இன்னும் சிலர் அழுகிய குடல்களையும் குப்பைகளையும் அந்த பொன் மேனியில் கொட்டினர். ஆனால் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களோ அனைவரையும் மன்னித்தனர். அனைவரும் நேர்வழி பெறவேண்டும், சுவர்க்கம் செல்லவேண்டும் என்று அழுதனர்.

கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களை தன் உயிரை விடவும் நேசிக்க வேண்டும் என்று அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்.

மேலும் அன்னவர்களை முழுமையாக பின்பற்றுமாறும் அல்லாஹ் கூறுகிறான்.

இன்றைய காலத்தில் இஸ்லாத்திற்கு வெளியில் இருந்து இஸ்லாத்தின் எதிரிகள் ஒருபுறம் அன்னவர்களை கேவலப்படுத்த முயற்சிக்கின்றனர். இன்னொரு புறம் முஸ்லிம்கள் என்ற போர்வையில் இஸ்லாத்திற்குள் இருந்து சில முனாபிக்குகள் அன்னவர்களை கேவலப்படுத்தும் விதமாக அன்னவர்களை சாதாரண மனிதர் என்றும், அன்னவர்களை புகழ்வது ஷிர்க் என்றும், அன்னவர்களை எல்லா நிலையிலும் பின்பற்ற தேவை இல்லை என்றும் பல்வேறு வழிகெட்ட கருத்துக்களை கூறி மக்களை வழிகெடுத்து மக்களின் உள்ளத்தில் இருந்து கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் அன்பையும் கண்ணியத்தையும் பிடுங்கி எடுக்க பார்க்கின்றனர்.

ஆனால் அல்லாஹ் யாரை நேசிக்கின்றானோ அந்த சீதேவிகளின் உள்ளத்தில் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் மீதான அன்பை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகப்படுத்துகிறான். அதேநேரம், அல்லாஹ் யாரை வெறுக்கிறானோ அத்தகைய கேடுகெட்ட மூதேவிகளின் உள்ளத்தில் இருந்து கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் அன்பையும் கண்ணியத்தையும் பிடுங்கி எடுத்து அவர்களை வழிகேட்டில் விட்டு விடுகிறான்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் உண்மை முஸ்லிம்களா?

உங்கள் உள்ளத்தில் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களை பற்றி உண்மையிலே அதிகம் அன்பு உள்ளதா? அதை வாயளவில் மட்டும் சொல்லாதீர்கள். செயலில் காட்டுங்கள். வழிகேடுகள் பெருகி மனித ஷைத்தான்கள் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் கண்ணியத்தை களங்கப்படுத்த நினைக்கும் இக்காலத்தில் அந்த ஷைத்தான்களுக்கு எதிராக போராடுங்கள். கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் சிறப்புகளை உலகிற்கு பலமாக எடுத்து சொல்லுங்கள்.

எந்த எந்த வழியில் முடியுமோ அத்தனை வழிமுறைகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் சிறப்புகளை உலகில் பரவ செய்யுங்கள்.

முஹம்மத் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் முழுமையான வாழ்க்கை சரிதை

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் சிறப்புகளை எடுத்து சொல்லும் அல் ஹதீஸ்கள்

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் மறைவான ஞானத்தை பற்றி எடுத்து சொல்லும் அல் ஹதீஸ்கள்

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை புகழ்ந்து பாடுதல், மௌலிது, மீலாது போன்றவை சம்பந்தமான அல் ஹதீஸ்கள்